சாலையை
கடக்க உதவிய பின்,
"பார்த்துப் போங்க"
என்ற
என்னைப்பற்றி
என்ன நினைத்திருப்பார்
அந்த பார்வையற்றவர்?!

கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்
கடல் அலை வந்து
அள்ளிச் சென்றது
அழகான கவிதை என்று......

பூக்கள் அவள் மீதும் விழுந்தன
என் மீதும் விழுந்தன ....
சிறு வித்தியாசம்தான்!!
அவள் "மணவறையில்"
நான் "மண்ணறையில்"......

சூரியன் வரைந்த
அழகான ஓவியம்
உன் நிழல்..............

மீன் சாப்பிடக்கூடாது என்றிருந்தேன்
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக.....

எப்போதும் "அவள்" நான் தூங்கியபிறகுதான் வருகிறாள்......!
அன்று "கனவில்"...........!!

நீ அங்கேயே இரு...
நான் இங்கேயே இருக்கிறேன்...
என் நினைவில் நீ வாழ்வாய்
உன் நினைவில் என்னைப்போல்!
நாம் சந்திக்க வேண்டாம்...
..
..
..
..
தாங்க முடியாது
மீண்டும் ஒரு பிரிவை.....

உன்னோடு ஒரு முறையாவது
நிலாச்சோறு உண்ண வேண்டும்..!!
பௌர்ணமியின் ஒளியில்
கதைகளாயிரம் கதைக்க வேண்டும்..!!
கடற்கரை மணலில் அமைதியாக
ஐந்து நிமிடம்; அலைகளின் தாலாட்டோடு..!!
எனக்கும் ஆவல்தான்.......

அவள் மிகவும் பொறுமையானவள் ..
அதனால்தான்
நான் கொடுத்த காதல் கடிதத்திற்கு ,
பதில் கொண்டுவருகிறாள் பூக்களோடு .
என் கல்லறைக்கு.......!!!

அவளுக்கும் நிலவுக்கும்
தினந்தோறும் கடுமையான போட்டி
அழுகி யார்...?
அவளா.? நிலவா...?

இதற்கு மட்டும் தான்
ஆண்,பெண் வித்யாசமில்லை
நட்பு.......
நல்ல வேளையாக உன்னை சந்தித்தேன்
இல்லையெல்.....
நட்பிற்க்கு விடை தெரியாது போயிருக்கும்....
ஹைக்கூ கவிதையின்
கடைசி வரியைப்
போல நீ எனக்கு..!
நண்பர்கள் மறப்பாய். .
உணவு குறைப்பாய். .
தூக்கம் தொலைப்பாய். .
கண்ணாடி அணிவாய். .
இமெயிலில் வாழ்வாய். .
தாய்மொழி மறப்பாய். .
புத்தகக் கடையில் version கேட்ப்பாய். .
கனவிலும் logic பேசுவாய். .
கணிப்பொரியய் பாடல்களால் நிரப்புவாய். .
பின்னிரவில் தொலைக்காட்சி ரசிப்பய். .
அவ்வப்போது அபூர்வமாய் சிரிப்பாய். .
நேரத்தைவிட வேகமாகிப்போகும்
வாழ்க்கையை விட்டு வெளியே
வரத்தெரியாமல்
கணிப்பொறிக்குள்
சிக்கி தொலைந்துபோவாய்!




