Monday, 04.06.2026
My site
Site menu
Login
Counter

visitors globe
Earn Money
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Tricks & Tips

Tip Of the week

Turn off pc within seconds

Open Task Manager

Select shutdown

Hit control with enter

யாவா என்றால் என்ன?
யாவா என்பது கணணிதுறையில் உள்ள பல்வேறு கணணிமொழிகளில் (உதாரணம்: Cobol, 
Fortran, Pascal, C, C++, Visual Basic, மற்றும் பல) புதியதும், இளையதுமான 
மொழியாகும். "சி++"(C++) என்னும் இன்னொரு கணணிமொழியின் வாரிசாகப் பலரால் 
கருதப்படுகிறது. காரணம், யாவா மொழி சி++ ஐ ஒத்திருப்பதேயாகும். 

சரி, கணணிமொழி என்றால் என்ன? அதற்கு முதல் மொழி என்றால் என்ன? ஆம், மொழி 
என்பது மனிதர்களுக்கிடையிலான தொடர்பூடகம். உணர்வுகளை, கருத்துக்களை மற்றும் 
சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளம். அதன் அடிப்படையில் கணணிக்கும் 
மனிதனுக்கும் இடையிலான தொடர்பூடகமே இந்தக் கணணிமொழிகள். மனிதன் தனது 
சிந்தனையை இம்மொழிகள் மூலம் கணணிக்குத் தெரிவிக்கிறான். அதனைக் கணணிகள் 
உள்வாங்கிப் புரிந்து கொள்கின்றன. அந்தப் புரிதலின் அடிப்படையில் அந்த சிந்தனையை
செயற்படுத்துகிறது. சுருக்கமாகச் சொல்லின் மனிதன் ஏவல் செய்ய, கணணி செயற்படுகிறது. 
இந்த இருவருக்குமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வன கணணிமொழிகள் ஆகும். 

யாவா - சுருக்கமான வரலாறு 
யாவாவின் வரலாறு எழுபதுகளிலேயே மெதுவாகத் தொடங்கிவிட்டதால், அதுபற்றி நிறையவே 
எழுதலாம். இருந்தாலும் அவற்றை எழுதுவதன் மூலம் மேலதிகமாக பல தகவல்களையும் 
விளக்கங்களையும் தரவேண்டியிருக்கும். எமது குறிக்கோள் "யாவா அடிப்படைக் கல்வி" 
என்பதால் அவற்றையெல்லாம் தவிர்த்துக் கொள்கின்றேன். 

23 ஆம் திகதி மே மாதம் 1995 ஆம் ஆண்டு அன்று யாவா மொழி "SUN" நிறுவனத்தினரால் 
கணணி உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. யாவா என்னும் பெயர் இந்தோனேசியத் 
தீவுகளில் ஒன்றான "யாவாத் தீவின்" பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததல்ல. 
இந்தப் பெயர் அமெரிக்க மென்பொருள் வல்லுனர்களால் கோப்பிக்கு வழங்கிவந்த பெயர்களில் 
மிகவும் விரும்பப்பட்ட பெயரில் இருந்து பெறப்பெற்றது.

யாவா - இயல்பு
இலகுவானது(easy): சி++ என்னும் கணணி மொழிபோன்று யாவாவும் இலகுவானது. அதனைப் 
போன்று என்பதைவிட, அதனைவிட இலகுவானது என்பது மிகப் பொருந்தும். சி++ மொழி 
கற்றவர்களுக்கு யாவா மொழி பயன்படுத்துவது எளிது. அதேபோல் யாவா மொழியினைப் 
பயன்படுத்துவதன் மூலம் சி++ மொழியின் அந்தரங்கங்களை அறிந்துகொள்ளக்கூடிய வசதியுண்டு. 

எளிமையானது(simple): சாதாரணமாகவே அனைத்தையும் விளங்கிக் கொண்டு பயன்படுத்தக்கூடிய 
வசதியுண்டு. அதுதவிர IBM, Symantec போன்ற நிறுவனங்கள் சில செயலிகளை 
உருவாக்கியுள்ளன. அவற்றின் மூலம் தேவைளான சில உருவங்களை எளிதாக இணைத்துக் 
கொள்ளலாம். இதனால் மற்றைய கணணிமொழிகளின் பலவீனங்களை திருத்தி தனக்குப் பலம் 
சேர்த்துள்ளது. நம் நாட்டில் முற்றத்தில் சாதாரணமாக சேலை உடுத்துக் கொண்டு குந்தியிருக்கும் 
பாட்டி போன்று எளிமையானதாய் இருக்கும். ஆனால், அதன் எளிமைக்குள்ளே அனைத்து 
இயக்கங்களும் சாதனைகளும் அடங்கிக் கிடக்கும். 

பொருளை மையப்படுத்தியது(object-oriented): பொருளை மையப்படுத்திய செய்நிரலாக்கத்தின் 
(programming) போது பொருள் உருவாக்கத்திலேயே முழுக்கவனமும் செலுத்தப்படுகிறது. 
இன்னமும் குறிப்பாகவும் விளக்கமாகவும் சொல்லப்போனால் ஒரு பொருளானது தரவுகளையும்(Data) 
செயற்பாடுகளையும்(function) அடிப்படையாகக் கொண்ட செயல்முறையால்(Methode) ஆனது. 

பகிர்ந்தளிக்கப்பட்டது(Distributed): யாவாவின் செயற்பாடுகள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்து 
இயங்கத்தேவையில்லை. அதாவது தூரத்தில் இருக்கின்ற ஒரு பொருளை (இங்கு நான் பொருள் 
என்று குறிப்பிடுவது தரவுகளையும், செயற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்ட 
செயல்முறையைத்தான்) இணையத்தின் ஊடாகவே இயக்கமுடியும். இணைய உலாவிகளில் 
(Browser) அதற்கான சேவைகள் இணைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். 

விளக்கமுடையது (மொழிபெயர்ப்பு): மனிதனுக்கு விளங்கக்கூடிய யாவா மொழியானது
JAVAC-Compiler(தொகுப்பி) மூலம் கணணி இயந்திரங்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய Bytecode 
(I O I O I O) முறையில் மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது. இதனை உணர்ந்துகொணடு கணணி 
இயந்திரங்கள் தமது சேவையை வழங்குகின்றன. இன்னொன்று குறிப்பிடவேண்டும் 
என்னவென்றால், இது Bytecode முறையில் அமைந்திருப்பதால் எந்தவித மாற்றங்களும் இன்றி 
யாவா மொழியை அங்கீகரித்த அனைத்து கணணி இயந்திரங்களிலும் செயலாற்றும். 

பலமானது(robust)& பாதுகாப்பானது: யாவா தனது தொகுப்பி(compiler) மூலமும், ஓடுநேர சூழல் 
மூலமும் தன்னை மேலும் பலப்படுத்துகிறது. அதாவது ஆரம்பத்தில் தொகுப்பி மூலம் பிழைகள் 
கண்டறியப்படுகின்றன. அதன்பின்னர் அது இயங்கும்போது "யாவா-ஓடுநேர-சூழல்" 
(Java-Runtime-Environment) பிழைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஒரே நேரத்தில் பல்வித செய்பாடுடையது (Multithread): அதாவது ஒரே நேரத்தில் பலவித 
செயற்பாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்ற்றுவதன் மூலம் தனக்குரிய வேலையில் 
முழுக்கவனமும் செலுத்தப்படுகிறது

யாவாவால் என்ன முடியும்?
சுருக்கமாகச் சொல்லின் எல்லாம் முடியும். 
உதாரணம்: அசைவூட்டம், இணையப்பக்கங்களில் இயங்கும் நாற்சந்திகள்(Chatroom), 
கணிப்பி(Calculator), இணையப்பக்கம், இசை, எழுதிகள், சிறிய மிதக்கும் செய்நிரல்(Applet), 
இணையப்பக்க நேரங்காட்டி, விளையாட்டு மென்பொருட்கள், மொழிபெயர்ப்புச் செயலிகள், 
கல்வி சார் செயலிகள், இன்னும் பலப்பல..

யாவாவைச் சுற்றி: 
யாவா மிதக்கும் செய்நிரல் (Java Applet): இது இணையத்தின் மூலம் இன்னொரு 
கணணியிலிருந்து (இணைய வழங்கி)உலாவி (Browser) மூலம் தரவிறக்கப்பட்டு உங்கள் 
கணணியில் இயங்கும் ஒரு செயலி. 

யாவா பயனுறுத்தம் (Java Application): இது உங்கள் கணணியிலிருந்தே இயங்கும் 
செயலி வகை. 

யாவா எழுத்துரு (Java Script): இதற்கும் யாவாவிற்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் 
இல்லை. எனவே நீங்கள் யாவாவையும், யாவா எழுத்துருவையும் ஒன்றென எண்ணிக் குழம்பி 
விடாதீர்கள். இரண்டுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கின்றது. அது யாவா என்னும் பெயர்தான். 
மற்றும்படி யாவா எழுத்துரு இணையமொழியான HTML உடன் இணைத்து எழுதப்படும் எழுத்துரு 
மட்டுமே. இது இணைய உலாவியான NETSCAPE இன் தயாரிப்பு. இது ஒரு செயலி என்று கூடச் 
சொல்லமுடியாது. பெரிய செயலிகள் உருவாக்கத்திற்கும் இது பயன்படுத்தப்படுவதில்லை. 
இது யாவா போன்று Bytecode வடிவில் தொகுக்கப்பட்டு (compile) தரப்படுவதில்லை. நேரடியாகவே 
இயங்குவது. இன்னொன்று என்னவென்றால் யாவா மிதக்கும் செய்நிரலைவிட வேகம் குறைந்தது. 

யாவா நிறுவல் - வழிமுறை
நாம் யாவா மொழி கற்பதற்கும், பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் எமக்கு ஒரு தளம் தேவை. 
உதாரணம்-1: அதாவது நாம் தமிழ் மொழி கற்க வேண்டுமென்றால் வாசித்தல், எழுதல், 
உரையாடல் போன்றவற்றைச் செய்யவேண்டும். அவற்றில் வாசிப்பதற்குப் புத்தகம் தேவை. 
எழுதுவதற்குத் தாள்கள் தேவை. 
உதாரணம்-2: கணணியிலும், இணையத்திலும் நன்கு பரீட்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும் 
இணையப்பக்கங்களைச் செய்வதற்கு எமக்கு 
HTML-Editor (Microsoft Frontpage) தேவை. 
அதுபோலவே யாவா மொழியில் செயலிகளை செய்வதற்கு எமக்கு ஒரு Java-Editor தேவை. 
இன்று வேகமா வளர்ந்துவரும் கணணித்துறையில் நிறையவே மென்பொருட்கள் உள்ளன. 
அவற்றில் இலவசமானவை, விலைக்குரியவை என்று பல இருக்கின்றன. ஆனாலும் நாம் இங்கு 
யாவா மொழி கற்பதற்குத் தேர்ந்தெடுத்துள்ள மென்பொருள் இலவசமானதும், ஆரம்பநிலைப் 
பயிற்சியாளர்கள் இலகுவாகப் பயன்படுத்ததிக் கொள்வதற்கும் ஏதுவானதாகும். 


சரி நாம் Java-Editor ஐ மட்டும் எமது கணணியில் நிறுவப் போவதில்லை. நாம்Java-Editor 
இல் செய்கின்ற செயலிகளைத் தொகுப்பதற்கும், இயக்கிப் பார்ப்பதற்கும் தேவையான யாவா 
மென்பொருட்கள் சிலவற்றையும் அத்துடன் யாவா மொழி பற்றிய உதவிகள் வழங்கக்கூடிய 
புத்தகங்களையும் தரவிறக்கம் செய்து 
Java-Editor உடன் இணைக்கப் போகின்றோம். 
இதோ அதற்கான செயல்முறை: 

தயார்ப்படுத்தல்:

உங்கள் இணைய இணைப்பின் வேகம் 
56 kbit/s ஆக அல்லது அதிகமானதாக இருத்தல் வேண்டும். 
கணணியின் வேகம் 0<600 Mhz. ஆக இருப்பின் நல்லது. தேவையான மென்பொருட்களைத் தரவிறக்கம் 
செய்வதற்கு முன்னர், அவற்றைத் தற்காலிகமாகக் கணணியில் பதிந்து வைப்பதற்கான இடத்தை 
ஒதுக்கவேண்டும். உங்களிற்கென உங்கள் கணணியில் உள்ள உறையுள் 
(Folder)புதியதொரு உறையினை 
உருவாக்குங்கள். உதாரணம்: 
c:/your_name/Java. நீங்கள் தரவிறக்கம் செய்கின்ற மென்பொருட்களை 
இதற்குள் சேகரித்து வையுங்கள். தரவிறக்கம் செய்வதற்கு அந்தந்த மென்பொருட்களின் பெயர்களில் 
"
mouse in" இடது பக்கத்தினால் சொடுக்கவும். தரவிறக்கம் செய்யும் மென்பொருள் தானாகவே திறக்கும். 
அல்லது உங்கள் "எலியின்" வலது பக்கத்தினால் சொடுக்கிப் பின்னர் "Save as"என்பதைத் தெரிவு 
செய்யுங்கள். 
Java Developement Kit, JDK-Dokumentation, Java Runtime Enviroment
ஆகியவற்றை மட்டும் அதன் 
பெயர்களில் "
mouse in" இடது பக்கத்தினால் சொடுக்குங்கள். நீங்கள் தரவிறக்கம் செய்யப்போகும் 
மென்பொருள் உள்ள இணையப் பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் எழுதியுள்ளதின் படி தொடர்ந்து, 
தேவையான மென்பொருளைத் தரவிறக்ககம் செய்து கொள்ளுங்கள்.
 
தரவிறக்கம்:

1. யாவா மொழியில் எழுதி செயலிகளை உருவாக்குவதற்கான 
தளம்:http://www.bildung.hessen.de

2. யாவாவின் சுற்றி இயங்கக்கூடிய அனைத்து இயக்கங்களையும் 
உள்ளடக்கியது. தொகுப்பி (எழுதுவதை Bytecodeஇல் மாற்றுவது), மொழிபெயர்ப்பி(Bytecodeஇல் 
இருப்பதை மொழிபெயர்ப்பது), மிதக்கும் செய்நிரல்களை காட்டுவது, உதவி வழங்கும் புத்தகங்களை 
இயக்குவது போன்று பல தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது.
 தளம் : http://java.sun.com

3. Bytecode முறையில் இருக்கும் செயலி இயங்குவதற்கான தளம். 
(சூழல்) 
தளம்: http://java.sun.com

4. யாவா மொழியில் எழுதுபவற்றை Bytecode முறையில் மாற்றும் 
தொகுப்பி. 
 தளம்: http://www.ibm.com

5. யாவா பற்றிய விளக்கங்களும் உதவிகளும் உள்ள குறிப்பேடு. 
தளம்: http://java.sun.com

ava Developement Kit, JDK-Dokumentation, Java Runtime Enviroment ஆகியவற்றை மட்டும் அதன் 
பெயர்களில் "mouse in" இடது பக்கத்தினால் சொடுக்குங்கள். நீங்கள் தரவிறக்கம் செய்யப்போகும் 
மென்பொருள் உள்ள இணையப் பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் எழுதியுள்ளதின் படி தொடர்ந்து, 
தேவையான மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

அல்லது கீழே அந்த செயலிகளின் பெயர்களைத் தருகின்றேன் - Google (www.google.com) கொடுத்துத் 
தேடியும் தரவிறக்கம் செய்யலாம். 

Java Development Kit: jdk-1_1_8_010-windows-i586.exe 
JDK-Documentation: jdk118-doc.zip 
Java Runtime Enviroment: jre-1_1_8_010-windows-i586-i.exe


நிறுவுதல்
தரவிறக்கம் செய்த மென்பொருட்களை உரிய இடத்தில் உரிய முறையில் நிறுவிக் கொள்வோம். தரவிறக்கம் 
செய்தவற்றை எங்கே பதிந்து/சேகரித்து வைத்துள்ளீர்கள் என்பது ஞாபகம் இருக்கிறது தானே? சரி... இனி... 

முதலாவது: JDK (jdk-1_1_8_010-windows-i586.exe) மென்பொருளை நிறுவுவோம்.ஒரு செயலியை, 
கோப்பினை, அல்லது உறையினைத் திறப்பதற்கு "வின்டோசைப்" பொறுத்த மட்டில் அந்த செயலியில், 
கோப்பில், அல்லது உறையில் இரண்டுமுறை எலியின் (Mouse) இடது புறத்தினால் சொடுக்கவேண்டும். 
சரி நாம் JDK செயலியை பின்வரும் முகவரியில் நிறுவுவோம்: C:/jdk1.1.8 

இரண்டாவது: JRE (jre-1_1_8_010-windows-i586.exe) மென்பொருளினை C:/jdk1.1.8/jre என்னும் 
உறையினுள் நிறுவுவோம். 

மூன்றாவது: JDK - Documentation ஐ அவிழ்த்து C:/jdk1.1.8/docs என்னும் உறையினுள் சேர்ப்போம். 

நான்காவது: Windows Help (tut-winhelp) என்பதை அவிழ்த்து C:/jdk1.1.8/tutorial என்னும் உறையினுள் 
சேர்பபோம். 

ஐந்தாவது: Jikes-Compiler (jikes-1.18-windows) இனை அவிழ்த்து அதற்குள் உள்ள jikes.exe என்னும் 
கோப்பினை மட்டும் தனியே எடுத்து C:/jdk1.1.8/bin என்னும் உறையினுள் சேர்க்கவும். 

ஆறாவது: இறுதியாக Java Editor ஐ எங்காவது ஓர் இடத்தில் வைத்து அவிழ்த்து, அதனுள் உள்ள setup.exe 
என்பதை அழுத்துவதன் மூலம் C:/jdk1.1.8/javaeditor என்னும் உறையினுள் நிறுவவும்.

Site search
Site friends
Hey Ur IP Address
Visite

visit counter
Love Quotes
Copyright MyCorp © 2026
Create a free website with uCoz